யுவன் பாடவேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் முடிவெடுத்தார் - தனுஷ் பேட்டி!

Posted on 4.5.13 by Maaran Mannanசமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள ‘எதிர்நீச்சல்’ திரைப்படத்த்தை, தனுஷின் 'Wunderbar' தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘மரியான்’, ‘ராஞ்சனா’ திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது.

தனுஷின் இரு திரைப்படங்களுக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இது குறித்து தனுஷ் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டபோது...

ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றியது எப்படி இருந்தது?

ரொம்பவும் பெருமைப்படுகிறேன். அவர் இசையமைத்த படத்தில் நான் ஒரு பாடல் எழுதியிருப்பது என்னை மேலும் பெருமையடையச் செய்கிறது. ஒரு பாடல் காட்சியின் சூழலை வேறு ஒரு தளத்துக்கு கொண்டுபோகிறது அவரது இசை. அவர் இசையால் அந்தக் காட்சியை அடுத்த லெவலுக்கு ஏற்றிவிடுகிறார். 

அவரைப் பற்றி பேச எனக்கு தகுதி இல்லை என்றே நினைக்கிறேன். அவர் எந்த அளவிற்கு திறமைசாலி என்று உலகத்துக்கே தெரியும். ரஹ்மானுடன் வேலை செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

நீங்கள் எழுதிய பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியிருக்கிறாரே?

அதில் என்னுடைய பங்கு ஏதுமில்லை. நான் எழுதிய பாடலை யுவன் ஷங்கர் ராஜா தான் பாட வேண்டும் என்பதை ரஹ்மான் முடிவு செய்தார். 

ராஞ்சனா படத்தில் ரஹ்மான் இசை பற்றி சொல்லுங்கள்?

மரியான் பாடல்கள் உலகத்தரத்தில் உருவான தமிழ்ப்பாடல்களாக இருக்கும். ராஞ்சனா பாடல்கள் உலகத்தரத்தில் உருவான இந்திபாடல்களாக இருக்கும். இதை நான் சொல்லும் போது சாதாரண பதில்களாக இருக்கும். 

ஆனால் பாடல்களை நீங்கள் கேட்கும்போது உங்களுக்கே புரியும். இசையில் ரஹ்மான் பல உயரங்களை தொட்டவர். இருந்தாலும் ராஞ்சனா பாடல்களை கேட்கும் போது நீங்கள் வியக்கப்போகிறீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 

இந்தி படத்தில் சொந்தக் குரலில் பேசிய அனுபவம்?

எனக்கு இந்தி சுத்தமாகத் தெரியாது. அங்கிருந்து தமிழுக்கு வரும் ஹீரோயின்கள் எப்படி எழுதி வைத்து தமிழ் பேசுகிறார்களோ. அதைப்போலவே நான் இந்தி வசனங்களை தமிழில் எழுதி வைத்து இரவெல்லாம் மனப்பாடம் செய்து பேசியிருக்கிறேன்.

எதிர்நீச்சல் திரைப்படத்தின் தயாரிப்பாளராக உங்கள் கருத்து?

படம் வெற்றியடையும் என்பது நான் எதிர்பார்த்தது தான். என்னுடைய கணிப்பு சரியாகவே இருந்திருக்கிறது. எதிர்நீச்சல் வெற்றியடைந்தாலும், வெற்றியடையாமல் போனாலும் தொடர்ந்து என் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் என்பதில் சந்தேகமில்லை.

No Response to " யுவன் பாடவேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் முடிவெடுத்தார் - தனுஷ் பேட்டி! "

Leave A Reply

Advert

 
Disclaimer: www.cinekolly.com do not host any files, nor do we upload them. its merely an video indexing website,if accidently any of your copyright owned videos indexed by us, please email us, we will remove the links immediately.Videos here are for promotional purposes only. E-Mail: cinetamil@hotmail.com