இரத்த சோகையை தடுக்கும் உணவுகள் – Anemia Foods

Posted on 11.1.17 by Maaran Mannan

இரத்த சோகையை தடுக்கும் உணவுகள் – Anemia Foods

இரத்த சோகையை தடுக்கும் உணவுகள் – Anemia Foods is a short video on Anemia in Tamil. It cearly explains what is anemia, anemia symptoms, anemia causes, anemia foods in tamil. It suggests natural cure for anemia also. இரத்த சோகையை தடுக்கும் உணவுகள் – Anemia Foods இரத்த சோகை என்பது என்ன (அனீமியா) இரத்த சோகை அல்லது அனிமியா என்பது பரவலாக காணப்படும் ஒரு குறைபாடு. இது ரத்த சிவப்பு அணுக்கள் குறைபாட்டால் ஏற்படுகிறது. ரத்த சிவப்பு அணுக்களின் ஹீமோ குளோபின் தான் ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்கின்றன. ஹீமோ குலோபின், இரும்புச் சத்து, புரோட்டின்கள், இரத்தத்தில் சேரும் அளவைப் பொருத்து சிகப்பு அணுக்கள் உண்டாகும். ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் அனிமியா உண்டாகிறது. இதனால் ரத்தக் குழாய்கள் ஆக்சிஜனை, திசுக்களுக்கு எடுத்துச் செல்லுவது குறைந்து விடுகிறது. அணீமியாவின் அறிகுறிகள் மெலிந்து, சோர்ந்து காணப்படுவது. உடலில் சுருக்கங்கள் வெளுத்துப்போன தோல், கண்களில் களைப்புத் தென்படுவது. உடல் பலஹீனம், தலைசுற்றல், களைப்பு, சக்தியின்மை, மூச்சு விடுதலில் சிரமம், நகங்கள், உதடுகள் மற்றும் காதுமடல்கள் வெளுத்துக் காணப்படுதல் போன்றவை இரத்த சோகையின் அறிகுறிகளாகும். அனிமியா வருவதற்கு முக்கிய காரணங்கள், 1. குறைவான இரத்த சிகப்பு அணுக்கள் உற்பத்தியாவது 2. எலும்பு மஜ்ஜையில் குறைபாடு இருப்பது 3. போதுமான அளவு இரும்பு, புரோட்டீன், வைட்டமின்கள் சேராமலிருத்தல். 4. காயங்களால் அதிக ரத்த இழப்பு, 5. இரத்தம் கசியும் மூலம், 6. அதிக மாதவிடாய் உதிரப்போக்கு, 7. குடல் புழுக்கள். அனிமியா உணவு முறை அனிமியா சிகிச்சையில் உணவு மிகவும் முக்கியமான அங்கம் வகிக்கிறது. எல்லா விதமான ஊட்டச் சத்து நிறைந்த காய்கறிகள், உணவுகள் தேவை. வளரும் பருவத்தில் இரும்புச்சத்து போதுமான அளவு உடலில் சேர்ந்தால் பிற்காலத்தில் அனிமியா வராது. சுத்திகரிக்கப்பட்ட உணவுகளான மைதா ரொட்டி, பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, சர்க்கரை, இனிப்புகள் போன்றவை நமக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச் சத்தை அழித்து விடுகின்றன இவற்றிற்கு பதிலாக இயற்கையான பொருட்களை சமைத்து உண்ண வேண்டும். கோதுமை, முழு தானியங்கள், பழுப்பரிசி, இலைக் காய்கறிகள், முட்டைக் கோஸ், காரட், செலரி, பீட்ரூட், தக்காளி, ஆப்பிள், செர்ரி, திராட்சை, உலர் திராட்சை, அத்திப்பழம், பேரீச்சம் பழம், முட்டை ஆகியவற்றை உண்ணலாம். இரும்புச் சத்து மட்டும் போதாது. புரோட்டினும் தகுந்த அளவிலிருக்க வேண்டும். தாமிரச் சத்து சேர்ந்தால் இரும்புடன் நன்கு செயல்புரிந்து ஹீமோகுளோபினை உற்பத்தி செய்யும். மாமிச உணவில் உள்ள வைட்டமின் பி.12, அனிமியா குணமாக உதவும் இதற்குப்பதிலாக பாலில் தயாரிக்கப்பட்ட பாலாடைக் கட்டி எடுத்துக் கொள்ளலாம். நிலக்கடலை, கோதுமைப்புல், சோயா பீன்ஸ் போன்றவற்றிலும் வைட்டமின் பி.12 உள்ளது. வைட்டமின் சி அதிகம் தேவை. தினசரி புளிப்பான பண்டங்களை அதிகம் உண்ண வேண்டும். பொட்டாசியம். பாஸ்பரஸ், கால்சியம் சல்பர், அயோடின், உள்ள உணவுகளை உண்ண வேண்டும். பீட் ரூட் சாறில் இரும்பு அதிகமிருப்பதால் சிகப்பு இரத்த செல்களை நன்கு செயல்பட வைக்கும். மேலும், ஆழமாக மூச்சு விட வேண்டும். நடைப் பயிற்சிகள், யோகாசனங்கள் பயன் தரும். உடம்பை அழுத்தி மசாஜ் செய்தாலும் கூட இரத்த அளவு அதிகமாகும்.

No Response to " இரத்த சோகையை தடுக்கும் உணவுகள் – Anemia Foods "

Leave A Reply

Advert

 
Disclaimer: www.cinekolly.com do not host any files, nor do we upload them. its merely an video indexing website,if accidently any of your copyright owned videos indexed by us, please email us, we will remove the links immediately.Videos here are for promotional purposes only. E-Mail: cinetamil@hotmail.com