Are Obese Children Healthy

Posted on 10.1.17 by Maaran Mannan

குண்டான குழந்தைகள் ஆரோக்கியமா ஆபத்தா? Are Obese Children Healthy

குண்டான குழந்தைகள் ஆரோக்கியமா ஆபத்தா? Are Obese Children Healthy is a short video about குண்டான குழந்தைகள் ஆரோக்கியமா ஆபத்தா? Are Obese Children Healthy. It explains the problems of Child obesity and how to overcome the problem. தற்பொழுது குழந்தைகள் குண்டாக இருப்பது ஒரு பிரச்சனையாக உள்ளது. இதனால் ஏற்படும் சிக்கல்களைப் பற்றி இபொழுது பார்க்கலாம். குண்டான குழந்தைகள் - ஆரோக்கியமா? ஆபத்தா? குழந்தை குண்டாக இருந்தால் தான் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று பலர் கருதுகின்றனர். அழகான குண்டு குழந்தையின் கன்னங்களை கிள்ளதாவர் யார்? குழந்தை குண்டாக இருக்க வேண்டும் என்பதற்காக தாய்மார்கள் உணவை திணிக்கின்றனர். சாக்லேட்டுகள், நெய், பிஸ்கட்டுகள் முதலியன குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக தரப்படுகின்றன. இதனால் குண்டான குழந்தை வளர்ந்து குண்டான ஆடவனாக மாறுகிறது. உலக ஆரோக்கிய குழுமம் (WHO) வரும் ஆண்டுகளிலிருந்து குண்டான குழந்தைகளுக்கு ஏற்படும் இதய நோய் தாக்கமும் அதனால் ஏற்படும் இறப்புகளும், மிக அதிகமாகி விடும் என்று எச்சரித்துள்ளது. குண்டான சிறுவர் / சிறுமிகளுக்கு மன பாதிப்பும் ஏற்படும். பள்ளியில் கேலிக்குள்ளாவார்கள். இதனால் குண்டான சிறுவர், சிறுமியர்களின் மனம் பாதிக்கப்படுகிறது. உடல் குண்டாவது சுலபம் ஆனால் இளைப்பது கடினம்! எனவே குண்டாகும் முன் காப்பது நல்லது. குழந்தைகள் குண்டாவதர்கான காரணங்கள் பரம்பரை - பெற்றோர் இருவரும் குண்டாக இருந்தால் குழந்தையும் குண்டாகும். ஹைபோ தைராய்டிசம் - சில கோளாறுகளால் தைராய்ட் ஹார்மோன் சுரப்பு குறையும். இது நரம்புகளை பாதிக்கும். ஓபிசிடியையும் உண்டாக்கும். பெற்றோர்களின் பழக்க வழக்கங்கள் பெற்றோர்கள் அதிகமாக உணவுகளை உண்பவரர்களாக இருந்தால் சந்ததிகளுக்கும் வரும். இக் கால குழந்தைகளுக்கு படிப்பு முக்கியமாக இருக்கிறது. விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. படிப்பு, டி.வி., இன்டர்நெட்டில் இறங்கி விடுவதால் கொழுப்புகள் குறைய வாய்ப்பில்லை. வெளிவிளையாட்டுகளில் ஈடுபடுவதை வீட்டுக்குள் சௌகரியமாக வீடியோ கேம்ஸ் விளையாடுவது இன்றைய ஃபேஷன். தவறான உணவு முறைகள் - ஐ.டி. புரட்சியினால், வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறது. இதனால் வீட்டில் சாப்பிடுவதை விட ஹோட்டலில் சாப்பிடுவது அதிகரித்து விட்டது. குப்பை உணவுகள் அதாவது பிட்சா, சாக்லேட்டுகள் போன்றவை தான் சிறுவர் சிறுமியர் விரும்பும் உணவு. இந்த உணவுகளை அடிக்கடி உண்பதால் கொழுப்புகள் உடலில் சேர்ந்து விடுகின்றது. மனக்கிளர்ச்சி - சில மனபாதிப்புகளினாலும், உணவு அதிகமாக உட்கொள்ளும் நிலைமை ஏற்படுகிறது. எவ்வாறு சீர் செய்வது குழந்தைகளை முழு வைத்திய பரிசோதனை செய்ய வேண்டும். உடல், மனரீதியான பாதிப்புகள் இல்லாத பட்சத்தில் குழந்தையின் உணவில் கலோரிகளை குறைத்து, குழந்தைகளுக்கேற்ற உடற்பயிற்சி, உடலுழைப்பை அதிகரிக்க வேண்டும். எடையை இழக்க சிறுவர் / சிறுமியர்களுக்கு சுய உந்துதலை தூண்டி விட வேண்டும். இதற்கு பெற்றோர்களின் அரவணைப்பும் ஆதரவும் தேவை. வருமுன் காப்பது வந்த பின் காப்பதை விட சிறந்தது. குழந்தைகளை பகலில் தூங்க விட வேண்டாம். டி.வி. கம்ப்யூட்டரில் விளையாடுவதற்கு நேரம் ஒதுக்கவும். பேட்மிண்டன், கூடைப்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுத்தலாம். சிறுவர்களுக்கு வளரும் பருவத்தில் போஷாக்கான ஆகாரம் தேவை. எடை குறைய, கலோரிகளை குறைத்து அதே சமயம் எல்லா சத்துணவுகளும் தேவைப்படும்.

No Response to " Are Obese Children Healthy "

Leave A Reply

Advert

 
Disclaimer: www.cinekolly.com do not host any files, nor do we upload them. its merely an video indexing website,if accidently any of your copyright owned videos indexed by us, please email us, we will remove the links immediately.Videos here are for promotional purposes only. E-Mail: cinetamil@hotmail.com