How to make Natural Vaseline at Home

Posted on 7.1.17 by Maaran Mannan

இயற்கை வாசிலின் செய்வது எப்படி How to make Natural Vaseline at Home

இயற்கை வாசிலின் செய்வது எப்படி How to make Natural Vaseline at Home is a short video on இயற்கை வாசிலின் செய்வது எப்படி How to make Natural Vaseline at Home. The video explains the homemade natural vaseline using olive oil. It also elaborates on the uses and benefits of this natural vaseline. இன்று இயற்கையாக வாசிலின் தயாரிப்பது எப்படி என்று பார்போம். இதனை நேச்சுரல் வாசிலின் என்றும் சொல்லலாம். இது கடைகளில் கிடைக்கும் வசிலினைளிருந்து மாறுபட்டது, இயற்கையானது இதனை உங்கள் வீட்டிலேயே நீங்களே குறைந்த செலவில் எளிதாக தயாரித்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம். குளிரும், பனியும் ஆரம்பித்து விட்டாலே பலருக்கும் சருமத்தில் வெள்ளை வெள்ளையாகப் பனிப்பத்து எனப்படுகின்ற Chilblains வரத் துவங்கி விடும். இதற்கு வாசிலின் உபயோகிப்பது வழக்கம். கடைகளில் கிடைக்கும் வாசிலின் பெட்ரோலின் உப பொருளாக கிடைக்கும் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுவதாகும். இதற்கு மாற்றாக இந்த நேச்சுரல் வாசிலினை பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு போஷாக்கு அளிக்கும், செய்வதும் மிக மிக சுலபம். நேச்சுரல் வாசிலின் செய்யத் தேவையானவை இரண்டே இரண்டு பொருட்கள் தான் அவை 1. தேன் மெழுகு 30 கிராம் 2. ஆலிவ் எண்ணெய் 120 மி.லி. இதனை செய்வது மிக சுலபம் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதனுள் மற்றொரு சிறிய பாத்திரத்தை வைத்து. அதாவது வாட்டர் பாத் முறையில் உள் பாத்திரத்தில் தேன் மெழுகை சிறு சிறு துண்டுகளாக வெட்டி போட்டு அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து கரையும் வரை அடுப்பில் மிதமான தீயில் வைக்கவும். தேவை எனில் ஏதாவது உங்களுக்கு பிடித்தமான வாசனை எண்ணெயை 4 சொட்டு சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக பயன்படக்கூடிய வாசனை எண்ணைகள் – மல்லிகை, சந்தனம், லாவண்டர், தைம், ரோஸ்மேரி, போன்றவைகளாகும். பின்னர் இறக்கி சிறிது லேசாக ஆறியவுடன் ஒரு பாட்டிலில் ஊற்றி மேலும் கட்டியாகும் வரை ஆறவிடவும். இந்த நேச்சுரல் வாசிலின் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும். இதனை கை கால்களில் தடவிக் கொள்ளலாம். வாசனை சேர்த்தால் மிகவும் மணமாக இருக்கும். இந்த வாசிலினை கை கால்களில் யோசிக்காமல் நன்றாக அதிகமாகவே எடுத்து தடவலாம். நல்ல பலன் தரும். குளிப்பதற்கு முன்பு தடவியும் குளிக்கலாம். அல்லது குளித்து முடித்தவுடன் சருமம் சற்று ஈரமாக இருக்கும் பொழுது தடவினால் ட்ரை ஸ்கின் எனப்படும் உலர்ந்த சருமத்திற்கு மிகவும் ஏற்றது.

No Response to " How to make Natural Vaseline at Home "

Leave A Reply

Advert

 
Disclaimer: www.cinekolly.com do not host any files, nor do we upload them. its merely an video indexing website,if accidently any of your copyright owned videos indexed by us, please email us, we will remove the links immediately.Videos here are for promotional purposes only. E-Mail: cinetamil@hotmail.com