சிறுநீரக கல் அறிகுறிகள் – Kidney Stone Symptoms

Posted on 13.1.17 by Maaran Mannan

சிறுநீரக கல் அறிகுறிகள் – Kidney Stone Symptoms, Official YouTube Video

சிறுநீரக கல் அறிகுறிகள் – Kidney Stone Symptoms is a short video on சிறுநீரக கல் அறிகுறிகள் – Kidney Stone Symptoms. It clearly explains the causes of kidney stone, symptoms of kidney stone and what is kidney stone. சிறுநீரக கல் அறிகுறிகள் – Kidney Stone Symptoms இது தான் சிறுநீரக கல் சிறுநீரகங்கள் இரண்டு அவரை விதை போன்ற தோற்றத்தில் மென்மையான, சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் உள்ள உள் உறுப்புகள். சராசரியாக ஒவ்வொன்றும் 10 செ.மீ. நீளமும், 6 செ.மீ. அகலமும் 2.5 செ.மீ. விட்டமும் கொண்டவையாக இருக்கும். சிறுநீரகங்கள் செய்யும் பணிகள் இரத்தத்திலிருக்கும் நீரையும், உப்புகளையும் பிரித்தெடுப்பது. சிறுநீரக கற்கள் இரு வகைப்படும். ஒன்று ஆரம்ப கால கற்கள். மற்றொன்று பின் தோன்றும் இரண்டாம் ரக கற்கள். அமிலம் அதிகமுள்ள சிறுநீரில் தோன்றும். குடிப்பழக்கம், உடல் உழைப்பில்லா வாழ்க்கை, மலச்சிக்கல், யூரிக் அமிலத்தை உண்டாக்கும் உணவுகளை உட்கொள்ளுதல் முதலியவை ஆரம்ப கற்களை தோற்றுவிக்கும். இரண்டாம் ரக கற்கள் சிறுநீர்ப்பை கிருமி தொற்று. காரத்தன்மை அதிகம் உள்ள சிறுநீரில் தோன்றுகிறது. பெரும்பாலும், இந்த கற்கள் கால்சியம் ஆக்ஸலேட் (அ) பாஸ்பேட் வேதிப்பொருட்களால் ஆனவை. இந்த கற்களில் கால்சியம் தான் பிராதன பொருள். பாதிக்கு மேற்பட்ட கற்கள், கால்சியம், அமோனியம், மக்னீசியம் பாஸ்பேட் மற்றும் கார்பனேட் கலவைகளால் ஆனவை. மீதி கற்கள் ‘ஆக்ஸலேட்’டால் உருவானவை. கற்களின் அளவு மணல் அளவிலிருந்து ஒரு முட்டை அளவு வரை கூட இருக்கும். சிறுநீர் கற்கள் வர காரணங்கள் வளர்சிதை மாற்ற கோளாறுகள், சரிவர நீர் குடிக்காததால் சிறுநீர் கெட்டியாகி விடுதல, அதிகமாக வியர்வை சுரப்பதால் சிறுநீர் கெட்டியாகிவிடுவது போன்றவற்றால் கற்கள் ஏற்படலாம். உஷ்ணப் பிரதேசத்தில் உள்ளவர்கள் தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் கற்கள் ஏற்படலாம். உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை. சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று இருப்பது கூட ஒரு முக்கிய காரணம் ஆகைருக்கலாம். தவறான உணவு முறை, அமிலத்தை அதிகப்படுத்தும் உணவுகளை அதிகம் உண்பது. மைதா, சர்க்கரை, மாமிசம், டீ, காஃபி, மசாலா செறிந்த உணவுகள், ஊறுகாய்கள் முதலியவற்றை அதிகமாக உண்பது. மொத்த கற்களில் யூரிக் அமிலமும் சிஸ்டைன் கற்களும் முறையே 4% மற்றும் 1% விகிதத்தில் இருக்கும். சிறுநீரகங்களில் கிருமி தொற்று ஏற்பட்டால், அவற்றின் சுவற்றிலிருந்து செல்கள் உதிரும். இந்த செல்களை மையமாக கொண்டு கற்கள் உருவாகலாம். ‘கவுட்’ நோயில் ரத்தத்தில் அதிகமாக யூரிக் அமிலம் தேங்கி விடும். இந்த அமிலம் படிகங்களாகி சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும். சிருநீரககர்களின் அறிகுறிகள் சிறுநீரக கற்கள் சிறுநீரக பாதையில் நகர முற்படும் போதும், சிறுநீர் பிரிவதை தடை செய்யும் போதும், தாங்க முடியாத வலி ஏற்படும். வலி தொடைகள், அடிவயிற்றில் தெரியும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். அதுவும் வலியுடனும், எரிச்சலுடனும் இருக்கும். சில சமயம் சிறுநீருடன் ரத்தம் வரும். பிரட்டல், வாந்தி, வியர்வை உண்டாகும். சிலருக்கு கற்கள் இருந்தும் எந்த அறிகுறியும் தெரியாமலிருக்கும். வேறு எதற்காவது செக் அப் செய்யும் போது சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது தெரிய வரும்.

No Response to " சிறுநீரக கல் அறிகுறிகள் – Kidney Stone Symptoms "

Leave A Reply

Advert

 
Disclaimer: www.cinekolly.com do not host any files, nor do we upload them. its merely an video indexing website,if accidently any of your copyright owned videos indexed by us, please email us, we will remove the links immediately.Videos here are for promotional purposes only. E-Mail: cinetamil@hotmail.com