Pomegranate Benefits – Madhulai Benefits

Posted on 8.1.17 by Maaran Mannan

மாதுளையின் மருத்துவ குணங்கள் - Pomegranate Benefits – Madhulai Benefits

மாதுளையின் மருத்துவ குணங்கள்- Pomegranate Benefits – Madhulai Benefits இஸ் எ சோர்ட் வீடியோ ஒன மாதுளையின் மருத்துவ குணங்கள்- Pomegranate Benefits – Madhulai Benefits. இட் எச்ப்லைன்ஸ் தி வரிஸ் உசெஸ் ஒப் போமேக்ரானடே அண்ட் இட் அலசோ தேச்ச்ரிபெஸ் ஹொவ் இட் இஸ் உசெபிஉல் இந் வரிஸ் டிசீசெஸ் ஓர் டிசொர்தேர்ஸ். மாதுளம் முத்துக்கள்.. எல்லாமும் சத்துக்கள்.. மாதுளையின் மருத்துவ குணங்களைப்பற்றி பார்போம். பழங்களில் மாதுளம் பழத்தின் மகிமையே தனி. எல்லாப் பழவகைகளும் உடல் நலனுக்கு உகந்ததேவை தான் என்றாலும் மாதுளை உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ஆரோக்கியம் அளிக்க வல்லது. கர்ப்பிணிகள் மாதுளம் பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும். மாதுளம் பழத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், ரத்தச் சோகையைத் தடுக்க மாதுளம் பழங்கள் உதவும். முதுமையை தாமதப்படுத்தும் ஆற்றலும் மாதுளைக்கு உண்டு. மாதுளை இதய நோயை தடுப்பதுடன் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மாதுளை செரிமான கோளாறுகளை சரி செய்கிறது. மாதுளம் பழத்தில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகளவில் உள்ளது. அது நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குகிறது. மாதுளை பல்வேறு வகை புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பைத் தருகிறது. அல்சர் பிரச்னையால் அல்லல் படுபவர்கள் தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் பெறலாம். நோய் பாதிப்பால் உடல் பலவீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழம் சாப்பிட்டால் உடல் நலம் மேம்படும். மாதுளம் பழம் 100 கிராம் சாப்பிட்டால் 83 கலோரி சக்தியே கிடைக்கும். மாதுளம் பழத்தில் நார்ச்சத்து அதிகம். இது உணவு செரிமானத்துக்கு நல்லது. தினமும் மாதுளம் பழ ஜூசில் தேன் கலந்து காலை உணவுக்கு பிறகு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். மாதுளை பழச்சாறில் கற்கண்டு கலந்து சாப்பிட்டால் உடல் சூடு சம்பந்தப்பட்ட நோய்கள் காணாமல் போகும். மாதுளை எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. மாதுளம் பழத்தின் ஜூஸ், பாக்டீரிய எதிர்ப்பு நொதிகளை அதிகம் சுரக்கச் செய்யும். இது உணவு செரிமானத்துக்கும் உதவுகிறது. அதனால்தான் வயிற்றுக் கோளாறுகளுக்கு மாதுளம் பழம் சாப்பிடப் பரிந்துரைக்கப்படுகிறது. மாதுளம் பூவையும், அருகம்புல்லையும் சமமாக சேர்த்து சாறு எடுத்து மாதவிலக்கு காலங்களில் சாப்பிட்டால் அதிக உதிரப்போக்கு தொல்லையில் இருந்து விடுபடலாம். பித்தம் மற்றும் இருமலை போக்கும் சக்தி மாதுளைக்கு உண்டு. மாதுளை ரத்தம் உறைந்து கட்டிபடுவதையும் தடுக்கும். மாதுளம் பழத்தை உணவாக உட்கொள்வது மட்டுமின்றி சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். தோலில் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைத்து மாதுளம் பழம் சீரமைப்பதால், வடு ஏற்படுவதைத் தடுக்கிறதாம். முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையை போக்க மாதுளை விதையை அரைத்து பூசினால் நல்ல பலன் கிடைக்கும். முகப்பரு பிரச்னையால் அவஸ்தைப் படுபவர்கள் மாதுளம் பழச்சாறை பரு இருக்கும் இடத்தில் தடவினால் நல்ல குணம் தெரியும். மாதுளம் பழ விதையை நன்கு அரைத்து முகத்தில் பூசி, 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ நல்ல மாற்றம் தெரியும். உலர்ந்த சருமத்துக்கு பொலிவை கொடுக்கும் ஆற்றல் கொண்டது மாதுளை. இதன் சாறுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் புத்துணர்சசி பெறும். எதை மறந்தாலும் மாதுளையை மறக்காதீங்க.. உடல் ஆரோக்கியத்தை லேசா நினைக்காதீங்க..

No Response to " Pomegranate Benefits – Madhulai Benefits "

Leave A Reply

Advert

 
Disclaimer: www.cinekolly.com do not host any files, nor do we upload them. its merely an video indexing website,if accidently any of your copyright owned videos indexed by us, please email us, we will remove the links immediately.Videos here are for promotional purposes only. E-Mail: cinetamil@hotmail.com